×

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம்: அரசுக்கு கோரிக்கை

சென்னை: வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் இயக்கம், தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர்கள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மகளிர் ஆணையம் சார்பில் நேற்று 13வது சர்வதேச வீட்டு வேலை தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மகளின் ஆணைய தலைவி குமாரி மற்றும் கிரிராஜன் எம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டு வேலை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

வீட்டு வேலை தொழிலாளர்களை கவுரவிக்கவும், அவர்கள் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைப்பதற்காகவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக வீட்டு வேலை தொழிலாளர்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். குறிப்பாக, வீட்டு வேலை தொழிலுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும். வீட்டு வேலை தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் வாரியத்தில் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்வதாக கிரிராஜன் எம்பி உறுதியளித்தார்.

The post வீட்டு வேலை செய்யும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க புதிய சட்டம்: அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt. ,Chennai ,Dinakaran ,
× RELATED கல்வி நிறுவனங்களில் வர்த்தக...